இளம் வயதிலேயே உதவும் மனப்பான்மை கொண்டவர்:

இவர் 1975 ஆம் ஆண்டில் பிறந்தார். சிறுவயதில் தனது பெற்றோர் ஆதரவுடன் தனது பள்ளிப் படிப்பை தொடங்கினார். 1984 ஆம் ஆண்டு அவரது தந்தை இறந்துவிட்டார். தந்தையை இழந்த அவர் தன் தாய் வீட்டுவேலைக்கு சென்றதால் குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. தன் குடும்பத்தை காப்பாற்ற விவசாய வேலைகள் அனைத்திற்கும் சென்றார் (தென்னை மரம் ஏறுதல்…….).

இளம் வயதிலேயே இவருக்கு கிடைக்கும் வருமானத்தில் தானும் வாழ்ந்து தன்னிடம் உதவி என்று தன்னை நாடி வருபவர்களுக்கு உதவி செய்தார். தான் கஷ்டப்படும் போது யாரும் முன் வந்து உதவாத காரணத்தினால் தன்னிடம் உதவி என்று வருவோருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்.

இவர் 2000 ஆம் ஆண்டில் ஏழை எளிய குடும்பத்து  பெண்னை  எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணம் முடித்தார். மனைவி குழந்தைகள் என மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இருப்பினும்  தன்னுடைய குழந்தைகள் படிப்பின் மத்தியில்  முதியோர் , குழந்தைகள் இல்லத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். அவர் தன் சக நண்பர்கள் மற்றும் நண்பர் உறவினர்கள் இவர்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி தடை இல்லாமல் உதவுவார்.

பசியின்றி வருவோர்க்கு கடையில் தேனீர், உணவு போன்றவற்றை வாங்கி கொடுத்து பசியார வைபார்.
எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் தன்னிடம் இல்லை என்றாலும் தனக்கு தெரிந்தவர்களிடம் உதவி கேட்டு  இரவு பகல் பாராது உதவி வருகிறார். இத்தனைக்கும் அவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் பனக்காரரும் இல்லை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரும் இல்லை. ஆனாலும் இவரது செயல் வியக்க தக்கது.

ராஜேந்திரன்

Published by Priyavarshini R

photography

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started